☰
×

ஹீரோவாக ரோபோ சங்கர் நடித்த முதல் படமே கடைசி படமான சோகம்..!

 

நடிகர் ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்த படம் ‘அம்பி’.இந்தப் படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, மோகன் வைத்யா உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.2025 மே 9ஆம் தேதி வெளியான 'அம்பி' திரைப்படம் ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்த முதல் படம். அதுவே அவரின் கடைசி படமாகவும் அமைந்துள்ளது.


ஹீரோவாக அறிமுகமான தருணத்தில் அவரை இழந்துவிட்டதாக ரசிகர்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.திரையுலகில் எப்போதும் சிரிப்பையும், உற்சாகத்தையும் பரிமாறிய நடிகர் ரோபோ சங்கரின் மறைவு, சினிமா துறைக்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் எளிதில் நிரப்ப முடியாத வெற்றிடமாகவே மாறியுள்ளது.


2007ல் ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தின் மூலம் திரையுலகில் களம் இறங்கினார்.பின்னர் விஜய் நடித்த புலி, அஜித் நடித்த விஸ்வாசம், தனுஷ் நடித்த மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தனித்துவமான காமெடி நடிப்பால் ரசிகர்களிடம் இடம்பிடித்தார். தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக கலந்து கொண்டு பெரிய வரவேற்பைப் பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் திரும்பினார். ஆனால் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் சென்னையில் 'காட்ஜில்லா' படப்பிடிப்பில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.உடனே அவர் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு 8.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/KpnNm0V6NZg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/KpnNm0V6NZg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">