×

மகனாக மாறி இறுதிச்சடங்கு செய்த மருமகன்! ரோபோ சங்கர் உடல் தகனம்

 

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல்,வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ரோபா சங்கரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மநீம தலைவர் கமல்ஹாசன், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், நடிகர்கள் சத்யராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், பாண்டியராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், சினேகன், செந்தில் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு திரையுலகினர், சின்னத்திரை கலைஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை ரோபோ சங்கரின் உடல், வளசரவாக்கத்தில் உள்ள அவரின் வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள மின் மயானத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. ரோபோ சங்கருக்கு அவரின் மகளும், மருமகனும் இறுதி சடங்குகளை செய்தனர். ரோபோ சங்கரின் இறுதி சடங்கின்போது ஏராளமான திரைக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர்.