#BREAKING நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
Updated: Sep 18, 2025, 21:27 IST
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 46. சென்னையில் நேற்று முன் தினம் படப்பிடிப்பில் இருந்தபோது நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கமடைந்தார். உடனே அவர் சென்னை பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், பலனின்றி உயிரிழந்தார்.
தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட ரோபோ சங்கர், 2007 ஆம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராஜ அறிமுகமானார்.