☰
×

நைட்டி அணிந்து ஆம்புலன்ஸில் வந்த கொள்ளையர்கள்! தெலுங்கானாவில் நடந்த சினிமா பாணி ஏடிஎம் கொள்ளை!

 

தெலங்கானா மாநிலம் காந்தாரி நகரில், நைட்டி அணிந்து ஆம்புலன்சில் வந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்சில் வந்த அவர்கள், கேஸ் கட்டர் கருவியைப் பயன்படுத்தி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறான வேடமணிந்து, ஆம்புலன்சை பயன்படுத்தி வந்த கொள்ளையர்களின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில், நைட்டி மற்றும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆம்புலன்ஸில் வந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் எந்திரத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) அதிகாலை 1.00 மணி முதல் 1.30 மணிக்குள் இக்கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், நைட்டி மற்றும் முகமூடி அணிந்து, கட்டிங் மெஷின்கள் (Gas Cutters) மூலம் ஏடிஎம் எந்திரத்தைச் சேதப்படுத்திப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன.

தடயவியல் குழுவுடன் தீவிர விசாரணை:

காலையில் ஏடிஎம் எந்திரம் சேதமடைந்து கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் வழக்குப்பதிவு செய்து, தடயவியல் (Clues Team) குழுவின் உதவியுடன் விரல் ரேகைகள் மற்றும் தடயங்களைச் சேகரித்தனர். கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய சிசிடிவி காட்சிகளைப் போலிஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

எவ்வளவு பணம் கொள்ளை?

ஏடிஎம்மில் இருந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஏடிஎம்மில் இருப்பு வைக்கப்பட்டிருந்த தொகையைக் கணக்கிட்ட பிறகே இழப்பின் மதிப்பு தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் நிஜமானதா அல்லது போலிஸாரின் கவனத்தைத் திசைதிருப்பப் போலியாகப் பயன்படுத்தப்பட்டதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடரும் விசித்திரக் கொள்ளை சம்பவங்கள்:

கடந்த செப்டம்பர் 19 அன்று கரீம்நகர் புறநகர்ப் பகுதியான துர்ஷெட் மற்றும் திம்மாபூர் பகுதிகளில் உள்ள இரண்டு எஸ்பிஐ ஏடிஎம்கள் இதேபோல இலக்கு வைக்கப்பட்டன. அந்தச் சம்பவங்களிலும் மர்ம நபர்கள் பெண்களின் ஆடைகளை அணிந்து, சிசிடிவி கேமராக்களை மறைத்து, கேஸ் கட்டர் மூலம் கொள்ளையடிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

In an unusual ATM robbery, unidentified miscreants allegedly wearing nighties and masks arrived in an ambulance and broke into a State Bank of India (SBI) ATM in Telangana's Kamareddy district in the early hours of Sunday. CCTV footage captured the suspects arriving in an ambulance, wearing nighties and masks, damaging the SBI ATM with cutters and fleeing with cash around 1-1.30 am on October 11. Read more: https://t.co/qX5gOZFkWl

— NDTV (@ndtv) October 12, 2026


 

In an unusual ATM robbery, unidentified miscreants allegedly wearing nighties and masks arrived in an ambulance and broke into a State Bank of India (SBI) ATM in Telangana's Kamareddy district in the early hours of Sunday. CCTV footage captured the suspects arriving in an ambulance, wearing nighties and masks, damaging the SBI ATM with cutters and fleeing with cash around 1-1.30 am on October 11. Read more: https://t.co/qX5gOZFkWl

— NDTV (@ndtv) October 12, 2026