×

"ஆளுநரே உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்" - எம்.பி. சு. வெங்கடேசன் ட்வீட்!!

 

களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும்,  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி,  "திராவிட மாடல்  ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். அரசு காலாவதியான ஒரு கொள்கையை உயிருடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி.  திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது. தனிப்பட்ட முறையில் எனக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஸ்டாலின் நல்ல மனிதர். அவர் மாதிரி எனக்கு மரியாதை இருக்கிறது. அவரிடம் நானும் என்னிடம் அவரும் பரஸ்பரம் மரியாதையாகவே நடந்து கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது" என்றார்.



இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 

“திராவிட மாடல் செத்துப் போன தத்துவம்.”

“மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.”

“ பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்”

என்று சொல்லும் 
@rajbhavan_tn
 அவர்களே!

களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.