×

எனது திருமணம் குழந்தை திருமணம்- ஆளுநர் ஆர்.என்.ரவி

 

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின்கீழ் தமிழகம் வந்த பீகார் மாநில மாணவர்களிடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், “நான் இளவயதில் திருமணம் செய்துகொண்டேன், எனது திருமணம் குழந்தை திருமணம். திருமணத்தின்போது எனது மனைவி சிறுமியாக இருந்தார். எனது மனைவி கல்லூரிக்கு செல்லவில்லை, ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்தார். உலகத்தையே எதிர்க்கும் திறனை எனது மனைவி அளித்தார். என் மனைவியை போல் எனக்கு உறுதிணையாகவும், பலமாகவும் இருப்பது எதுவும் இல்லை.  உலகில் தான் எங்கு சென்று திரும்பினாலும் எனது மனைவிதான் எனது பலம்.  என் மனைவியும் நானும் சேர்ந்தே வளர்ந்தோம்.

பன்மொழி இருப்பது இந்தியாவுக்கு அழகு. பழமையான மொழி, கலாசாரத்தை கொண்டது தமிழகம், தமிழ், சமஸ்கிருதத்தில் எது மூத்த மொழி என்பது கேள்வி குறி. ஆங்கிலேயர்கள் வெளியேற்றத்திற்கு பின் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்பின் நடந்த அரசியலால் நாம் தனித்தனியாக மொழியை பிரித்துவைத்துள்ளோம். பாரத நாடு என்பது கலாசாரம் மற்றும் நாகரீக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது. பழமையான மொழிகள் என்றால் தமிழும் சமஸ்கிருதமும்தான் என சொல்வர்.இந்தியாவின் அடிநாதமாக இருப்பது வேற்றுமையில் ஒற்றுமை கொள்கையே. பக்தி இயக்கம் இந்த திராவிட மண்ணில் இருந்துதான் தொடங்கியது” எனக் கூறினார்.