×

ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர் மரிய வில்சன் 2 மனு தாக்கல்

 

ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் மரிய வில்சன் இரண்டு மனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 6 கடைசி நாளாக இருந்தாலும், 4 நாட்கள் மட்டுமே  வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது.

இதன்படி, 30, மார்ச் 2,4,6 ஆகிய நாட்களில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.6-ம் தேதி கடைசி நாள். 7-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஏப்.9 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் மரிய வில்சன் தண்டையார்பேட்டை மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பூங்கொடியிடம் மனுவை வழங்கினார்.அவர் பேரில் இரண்டு மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வெண்ணிலா தாயுமானவன் தனது வேட்புமனுவை வழங்கினார். மேலும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட ஐந்து பேர் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.