மக்களே உஷார்! தங்க நகையில் கலப்படம்- 22 காரட் முத்திரையிலும் மோசடி
தங்கத்தில் ரீனியம் என்ற ரசாயன பொடி கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
24 காரட் தங்கத்துடன் 'ரீனியம்' (Rhenium) உலோகப் பொடியைக் கலந்து தயாரிக்கப்பட்ட நகைக்கு, ஜோத்பூரில் உள்ள சோதனை மையத்தில் 22 காரட் முத்திரை வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நகையில் உண்மையான தங்கத்தின் அளவு 81.7% மட்டுமே. இது சுமார் 20 காரட் தங்கத்தின் தரத்துக்குச் சமம். ஒரு தோலா (11.66 கிராம்) நகைக்கு, தங்கத்தின் விலை ரூ.1.5 லட்சம் எனக் கணக்கிட்டால், வாடிக்கையாளருக்கு சுமார் ரூ.14,700 இழப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கத்தின் எடையை அதிகரிக்க 'ரீனியம்' (Rhenium) என்ற உலோகப் பொடியை கலந்தது தெரியவந்துள்ளது.
தங்கத்தில் ரீனியம் கலப்பது ஏன்?
ரீனியம் என்பது தங்கத்தைவிட அதிக அடர்த்தி கொண்ட அரிய உலோகம். தொழில்துறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனை கலப்பதன் மூலம் நகையின் எடையை அதிகரித்து, உண்மையான தங்கத்தின் அளவைக் குறைத்தும் அதிக எடை கொண்ட நகையாக விற்பனை செய்யலாம். ரீனியம் சீனாவில் இருந்து வருகிறது. சீனாவின் ஷென்சென் நகரைச் சேர்ந்த முகவர், ரீனியம் பொடியைத் தயாரிப்பதாக ஜோத்பூர் விசாரணைக் குழுவிடம் கூறியுள்ளார். தங்க நகையில் ரீனியம் கலப்பதால்
உண்மையான தங்கத்தின் அளவைவிட அதிகமாகப் பணம் செலுத்தும் நிலை ஏற்படலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பேரிழப்பு ஏற்படும்.