பாமக மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
கையில் பா.ம.க கொடியை சுற்றியபடி ஆபத்தான முறையில் வேன் மேல் அமர்ந்துக்கொண்டு மாநாட்டிற்கு வரும் இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு வன்னியர் எழுச்சி பெருவிழா மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்புரைற்ற உள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாநாட்டு திடலுக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர். 50 ஏக்கர் பரப்பரவில் நடைபெறும் இந்த மாநாட்டில் 3 லட்சம் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தத்திற்கு 150 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு வரும் இளைஞர்கள் வேன் மீது ஏறி கூச்சலிட்டபடியும், காரில் வருபவர்கள் காருக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டும், ஆபத்தான நிலையில் செல்கின்றனர் இந்நிலையில் வன்னியர் எழுச்சி மாநாட்டிற்கு வரும் இருசக்கர வாகனங்களுக்கு மாமல்லபுரத்திற்குள் நுழைய அனுமதியில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.