#BREAKING பட்டாசு தயாரிப்பு பணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு
பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்தை தடுக்க மருந்து கலக்கும் பணிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ண்டிகை தினங்கள் மற்றும் விசேஷ நாட்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படுவதுடன் மட்டுமின்றி, துக்க நிகழ்ச்சிகளிலும் பட்டாசுகள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கென
கந்தக பூமியான விருதுநகர் மாவட்டம் முழுவதும், அதிலும் குறிப்பாக சிவகாசி வட்டாரத்திலுள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் வருடம் முழுவதும் பட்டாசுகள் தயாராகிறது. பட்டாசுகளின் தேவையை 90 சதவீதம் பூர்த்தி செய்யும் சிவகாசியில் பட்டாசுத் தொழிலை ச் சார்ந்து அதன் சார்பு தொழில் நிறுவனங்களிலும் லட்சக்கணக்கான ஆண்கள் தொழிலாளர்கள் பணிபுரிந்து ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைப் பெறுவதுடன் வருமானமும் ஈட்டி வருகின்றனர்.
நடப்பாண்டின் தீபாவளிப் பண்டிகைக்கான பட்டாசுகளைத் தயாரிக்கின்ற பணிகள் முழு வீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடைகாலமா யிருக்கும் பட்சத்தில், தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் கூடுதலாயிருக்கும் நேரங்களில் நடைபெற்று வரும் பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகளைத் தடுக்க பட்டாசு ரசாயன மூலப் பொருட்களை கையாண்டு, எடை போட்டு, கலவை செய்யும் பணிகளில் காலை நேரங்களில் மட்டுமே ஈடுபட வேண்டுமென மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை பட்டாசுத் தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி யுள்ளது. பேன்சி ரக ப் பட்டாசுகள் உள்ளிட்ட பட்டாசு ரக வகைகளின் தயாரிப்பிற்காகப் பயன்படுத்துப்படும் மணி மருந்து மற்றும் முனை மருந்து ஆகியவற்றை உற்பத்தி செய்ய பொட்டாசியம் நைட்ரேட், சல்பர், சோடியம் ஆக்ஸைடு போன்ற ரசாயண மூலப்பொருட்களை க் கொண்டு கலவை செய்யும் பணிகள் வழக்கமாக அதிகாலையில் துவங்கி நண்பகல் வரையில் நடைபெறும்.
இந்த நிலையில் தற்பொழுது நிலவி வரும் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கத்தினால் ரசாயன கலவையில் ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்துக்கள் ஏற்பட கூடுதலான வாய்ப்புள்ளதால் பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தினைத் தடுக்க அபாயகரமான ரசாய ண மூலப் பொருட்களின் கலவை பணிகளை அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி காலை 10 மணிக்குள் முடித்திட வேண்டுமெனவும், மூலப் பொருள்களை கையாளும் தொழிலாளர்கள் மிகக் கவனத்துடன், விழிப்புணர்வோடு ஜாக்கிரதையாகக் கையாண்டு விபத்தில்லா பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென்றும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.