"மாநில உரிமைகளை மீட்க ஒவ்வொருவரும் தவறாது வாக்களியுங்கள்" - அமைச்சர் உதயநிதி
பாசிசத்தை வீழ்த்த ஒவ்வொருவரும் தவறாது வாக்களியுங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மக்களவைத் தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை S.I.E.T கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துணைவியாருடன் சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றினோம்.
பாசிசத்தை வீழ்த்தவும் - மாநில உரிமைகளை மீட்கவும் ஒவ்வொருவரும் தவறாது வாக்களியுங்கள்.
இந்தியா வெல்லட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.