×

"வஉசி, பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கைகள்" -  உயர்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!!

 

பாரதிதாசன் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணி குறித்து  உயர்கல்வித்துறை புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.

சுதந்திர போராட்ட வீரர், சிறையிலேயே செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ . உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி கொண்டாடப்பட்டது . வ உ சிதம்பரனாரின் பிறந்த நாள் இந்த ஆண்டு முதல் அரசு சார்பில் தியாகத்திருநாளாக கடைபிடிக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சிதம்பரனாரின் திருவுருவ சிலை அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனிடையே வஉசி பிறந்தநாளை ஒட்டி பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய ஆய்வறிக்கை அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதேபோல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். 

இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.