×

குடியரசு தின விடுமுறை - 800 சிறப்பு பேருந்துகள்

 

2026 ஜனவரி 26 அன்று நாட்டில் 77-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 

குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜன.23, 24, 25, 26 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து ஜன.23ம் தேதி 550, ஜன.24ம் தேதி 405 சிறப்பு பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து ஜன.23ம் தேதி 100, ஜன.24ம் தேதி 90 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவிருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

இதேபோல் மாதவரத்திலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஜனவரி 26ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.