ரயில் நிலையங்களில் வாடகை எலக்ட்ரிக் பைக் திட்டம்- ரயில்வே அதிரடி பிளான்
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், 'வாடகை எலக்ட்ரிக் பைக்' வசதியை அறிமுகம் செய்ய, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னையை தலைமை யிடமாக கொண்ட தெற்கு ரயில்வே சார்பில், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா, நாடகாவில் ஒரு சில பகுதி கள் என, 5,087 கி.மீ., துாரத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 300 விரைவு ரயில்கள் உட்பட, 1,000த்திற்கும் மேற்பட்ட தினசரி ரயில் சேவைகள் உள்ளன. தினமும், 26 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். பயணிய ருக்கு புதிய வசதிகளை கொண்டு வர, தெற்கு ரயில்வே தொடர் நடவ டிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கேரளா மாநிலம், பாலக்காடு கோட்டத்தில், கோழிக்கோடு ரயில் நிலையத்தில், முதல் முறையாக, 'வாடகை எலக்ட்ரிக் பைக்' வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, முக்கிய ரயில் நிலையங்களில், இந்த வசதியை விரிவு படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பயணியருக்கான வசதியை கருத்தில் வைத்து, தனியார் பங்களிப்போடு புதிய சேவைகளை வழங்கி வருகிறோம். முதல் முறை யாக, கோழிக்கோடு ரயில் நிலையத்தில், 'வாடகை எலக்ட்ரிக் பைக்' வசதி அறி முகம் செய்யப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு, 50 ரூபாய், 12 மணி நேரத் துக்கு, 500 ரூபாய், 24 மணி நேரத்துக்கு, 750 ரூபாய் என, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை, சேலம், திருச்சி, மதுரை கோட்டங் உள்ளிட்ட களில், முக்கியமான ரயில் நிலையங்களில், தனியார் பங்களிப்போடு, இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். பயணியர் எண் ணிக்கை, இடம் அளவு, ஒப்பந்ததாரர்கள் தேர்வுக்கு பின்னரே, ரயில் நிலையங்க ளின் பட்டியல் தெரியவரும். இவ்வாறு கூறினர்.