×

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விஜயபாஸ்கர் பேனர் அகற்றம்

 

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சி.விஜயபாஸ்கர் பேனர் அகற்றபட்டது.

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. அதிமுக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அணி - சி.வி.சண்முகம் அணியாக பிரிந்தது. இபிஎஸ் அணியில் 22 எம்.எல்.ஏ.,க்களும், சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ.,க்களும் இருந்தனர். இதனிடையே சி.வி.சண்முகம் அணியில் இருந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தவிர மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாயினர். 

இந்நிலையில் கடந்த 20 நாட்களாக பூட்டப்பட்டிருந்த புதுக்கோட்டை அ.தி.மு.க தலைமை அலுவலக சாவியை விஜயபாஸ்கர் ஒப்படைத்த பின்பு, மேள தாளத்துடன் வந்து அலுவலகத்தை திறந்து வைத்தார் புதிய வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல். மேலும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்ததால் சி.விஜயபாஸ்கரை பொறுப்பில் இருந்து நீக்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஈபிஎஸ் புதிதாக நியமித்த பழனிவேல் ஆதரவாளர்கள், விஜயபாஸ்கர் பேனரை அகற்றினர்.