×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்

 

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம்  அகற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக  வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ,  தேர்தலில் பதிவான வாக்குகள்  மே 4-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல்  ஆணையம்  அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள்  அமலுக்கு வந்தது. இதனால் அரசு அலுவலங்களில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசுத்திட்டங்களை அறிவிக்கும் புகைப்படங்களும் அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.