×

முதல்வர் ஸ்டாலினின் தனி செயலர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் வெளியீடு!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தனி செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சருக்கு கீழுள்ள துறைகளை இவர்கள் கவனித்துக் கொள்வார்கள். இது மட்டுமில்லாமல் இன்னபிற அமைச்சகத்திலுள்ள துறைகளின் கோப்புகள் முதலமைச்சர் மேஜைக்கு இவர்களைத் தாண்டியே செல்ல முடியும். அந்த வகையில் தற்போது இவர்கள் நால்வருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முதல் தனி செயலர் உதயசந்திரனுக்கான துறைகள்: பொது, ஊழல் தடுப்பு ஆணையம், ஐடி, உள்துறை, மதுவிலக்கு
 

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தனி செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சருக்கு கீழுள்ள துறைகளை இவர்கள் கவனித்துக் கொள்வார்கள். இது மட்டுமில்லாமல் இன்னபிற அமைச்சகத்திலுள்ள துறைகளின் கோப்புகள் முதலமைச்சர் மேஜைக்கு இவர்களைத் தாண்டியே செல்ல முடியும். அந்த வகையில் தற்போது இவர்கள் நால்வருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முதல் தனி செயலர் உதயசந்திரனுக்கான துறைகள்:

பொது, ஊழல் தடுப்பு ஆணையம், ஐடி, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால், உயர்க்கல்வித் துறை, பள்ளிக்கல்வித் துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், தொழில் நிறுவனங்கள், திட்டம் மற்றும் வளர்ச்சி, இந்துசமய அறநிலையத் துறை

இரண்டாம் தனி செயலர் உமாநாத்துக்கான துறைகள்:

எரிசக்தி, உணவு, சிறப்பு புதிய முயற்சி, மருத்துவ மற்றும் குடும்பநலம், போக்குவரத்து, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் தண்ணீர் வழங்கல், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகம், நீர் வளங்கள், நிதி

மூன்றாம் தனி செயலர் எம்.எஸ்.சண்முகத்துக்கான துறைகள்:

மனிதவள மேம்பாடு, கூட்டுறவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, சட்டப்பேரவை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துக்கள், தமிழ் வளர்ச்சி, தொழிலாளர் நலன், வேளாண்மை மற்றும் உழவர் நலன், முதலமைச்சர் அலுவலக நிர்வாகம்

நான்காம் தனி செயலர் அனு ஜார்ஜ்க்கான துறைகள்:

சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் காடுகள், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலன், சிறு,குறு தொழில் நிறுவனங்கள், இளைநர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சமூகநலம் மற்றும் மகளிர் நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், கால்நடை மற்றும் பால்வளம் – மீனவர் நலன், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை, சுற்றுலா, சமூக மாற்றம், மாற்றுத் திறனாளிகள் நலன், முதலமைச்சர் நியமனங்கள்