×

ரூ.20,000க்கு மேல் ரொக்கப் பரிமாற்றத்துடன் பத்திரப்பதிவா? இனி இதைக் கட்டாயம் செய்ய வேண்டும் ..!!

 


சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடக்கும் பத்திரப் பதிவு விபரங்களை வருமான வரித்துறைக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடக்கும் பத்திரப் பதிவு குறித்த விபரங்களை,  வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. தினேஷ் பொன்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் அவர் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.