×

“பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க"- சென்னை ஐகோர்ட்

 

பெண்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் பொன்முடி அண்மையில் இந்து சமயங்களை விலைமாதுவுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், அவரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கினார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “அமைச்சராக இருப்பவர் கீழ்த்தரமாக பேசலாமா? இதுபோன்று மற்றவர்கள் பேசியிருந்தால் போலீஸ் அமைதியாக இருந்து இருக்குமா? பொன்முடி பேச்சை பொறுத்து கொள்ள முடியாது. ஆகவே பெண்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வழக்குப்பதிவு செய்யாவிட்டால் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. ஆகையால் புகார் இல்லாமலேயே காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும்.  ஆட்சியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது, அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.