×

"ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை" - தவெக அரசை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

 

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் தொடங்கியபோது நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) சமூக வலைத்தளத்தில் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜோசப் விஜய் கொண்டு வந்த மேகதாது தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறிய பிறகு, ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியவுடன் சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

“முழு நேரலை… முழு நேரலை… அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்” என த.வெ.க அரசின் தேர்தல் கால வாக்குறுதியை அதிமுக விமர்சித்துள்ளது.

நேரலையை நிறுத்தியதைச் சுட்டிக்காட்டி, “மக்களுக்குக் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றுகிற மாதிரி உங்களுக்கு ஐடியாவே இல்லை போல, அப்படித்தானே சார்!” என அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது...

முழு நேரலை..
முழு நேரலை...
அத்தனையும் உருட்டா சார்!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.

எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற… pic.twitter.com/fiDfgi88SG

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) June 19, 2026