×

ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். தி.மு.க., ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை - நயினார் நாகேந்திரன்..!!

 
பட்டுக்கோட்டையில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அளித்த பேட்டி:
எங்களை பொறுத்தவரை, யாரையும் தீவிரமாக எதிர்க்க மாடோம். கொள்கை அளவில் எதிர்க்கிறோமே தவிர, தனிப்பட்ட முறையில் எந்த தாக்குதலும், யார் மீதும் இதுவரை கிடையாது.
எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது இல்லை. கரூர் சம்பவத்திற்கு பிறகு தான் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
சட்டசபையில் த.வெ.க.,வை ஆதரித்தும் பேசவில்லை; எதிர்த்தும் பேசவில்லை. அதனால், த.வெ.க.,விற்கு பா.ஜ., ஆதரவு தருகிறது என கூற முடியாது.
ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அதனால், ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். தி.மு.க., ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், துாய்மை பணியாளர்கள் என யாரும் நிம்மதியாக இல்லை.
எல்லா தரப்பினரும் போராடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், தி.மு.க.,வினர் எல்லோரிடமும் வெறுப்பை சம்பாதித்த கையோடு, 50,000 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தையும் சம்பாதித்துள்ளனர். அதை வைத்து, வெற்று விளம்பரம் செய்து வருகின்றனர்.
ஒரு கவுன்சிலர் கூட இல்லாத த.வெ.க., ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா கூறியிருக்கிறார்.
பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறார். பணத்தை வைத்து கூட்டம் கூட்டலாம்; ஆனால், ஆட்சிக்கு வர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.