ரீல்ஸ் மோகம்- ஓடும் ரயிலில் சாகசம் செய்த சிறுவன் ஐசியூவில் அனுமதி
Updated: Oct 13, 2024, 11:45 IST
சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் படியில் தொங்கி சாசகம் செய்த மாணவன் அபிலாஷ் (16) கீழே விழுந்து படுகாயமைடைந்தார்.
சமூக வலைதளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். சினிமா பாடலுக்கு நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் ரீல்ஸ்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அதில் சிலர் இறக்கவும் செய்கின்றனர். அது போல் ஒரு சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.