☰
×

#BREAKING 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய அதி கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நியூஸ்18 தமிழ்நாடு

நியூஸ்18 தமிழ்நாடு