“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்”- ஆர்.பி.உதயகுமார் கொலை மிரட்டல்
அதிமுகவில் முக்கியமான தலைவர்கள் பலர் இருக்கும்போதே, தேர்தல் களத்தில் மதுரை மாவட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, அங்குள்ள 10 தொகுதிகளில் 8 இடங்களில் தவெக வெற்றி பெற்று, மீதி 2 இடங்களில் திமுக கூட்டணி வென்றுள்ளது. அப்படிப்பட்ட தவெகவில் தனக்கு இடம் கிடைக்காது என்ற விரக்தியில்தான், தினமும் காலையில் எழுந்து வீடியோ போட்டு புலம்பி வருகிறார் என்று தவெகவினர் சாடியுள்ளனர்.
அந்தவகையில், தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “சட்டப்பேரவையில் முதல்வர் விஜயை பாராட்டி பேசும் அமைச்சர்கள், ஆதவ் அர்ஜூனா போன்றோர் விஜய் பிரதமராக வரவேண்டும் என பேராசையை வெளிப்படுத்திவருகின்றனர். விஜய் இந்தியாவின் பிரதமராக மட்டுமல்ல, அமெரிக்காவிற்கே ஜனாதிபதியாக கூட வருவார். ஐக்கிய நாட்டிற்கே கூட தலைவராக வருவார், சீன அதிபராக வருவார், இங்கிலாந்தின் இளவரசராக வருவார், தென்கொரியாவின் அதிபராக வருவார் என்று கூட பாராட்டி பேச விஜயின் அமைச்சர்களுக்கு எந்த வாய்பூட்டு சட்டமும் கிடையாது. ஆனால் அதிமுகவில் பிள்ளை பிடிக்கிற வேலையை தொடர்ந்து செய்யும் நீங்கள், நான் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., நான் தான் புரட்சி தலைவி அம்மா, தவெக ஆட்சி தான் அதிமுக ஆட்சி என்று அதிமுகவின் அப்பாவி தொண்டர்களை, அதிமுகவின் உண்மை விசுவாசிகளை ஏமாற்றி அதிமுகவை அபகரிக்கவோ, அழிக்கவோ நீங்கள் முயற்சி எடுப்பது எங்களது கடைசி விசுவாசி தொண்டன் இருக்கும் வரை நடக்கவே நடக்காது. அப்படியே மோசடி செய்து, அதிமுகவை அழிக்கும் நிலை ஏற்பட்டால், அதிமுகவின் விசுவாசிகள், உண்மையான தொண்டர்கள் உயிருடன் இருக்க மாட்டோம். அப்படி இல்லையென்றால் நீங்கள் உயிரோடு இருப்பீர்களா? என எனக்கு தெரியாது. அதிமுகவில் அந்நியர் படையெடுத்து, அபகரிக்க முற்பட்டால் குடும்பத்திற்கு ஒருவர் வெற்றி திலகமிட்டு, வீர திலகமிட்டு தற்கொலைப்படையாக புறப்பட்டு புரட்சியை நிகழ்த்தி காட்டுவதற்கு எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆசி எங்களுக்கு கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.