×

விஜய்யின் அன்புக்குரிய அண்ணி த்ரிஷா துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு... ஆர்.பி.உதயகுமார் மீண்டும் சர்ச்சை

 

முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால்தான் அரசு பதவி கிடைக்கும் என்றால் அது ஜனநாயகமா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளிலேயே தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ள தவெக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கொள்கை முழக்கம் செய்து வருகிறது என எல்லோரும் நம்பினோம். ஆனால் தற்போது அரசு பணி நியமங்கள் நிலவரம் கலவரமாக மாறியுள்ளது. விஜய் படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது அரசுப் பதவிகளில் சத்தமில்லாமல் நியமித்துவருகிறார். அர்ச்சனா கல்பாத்தி, ஜெகதீஷ் பழனிசாமி, மனோஜ் பரமஹம்சா, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டு, ராம்குமார் ஆகியோர் அரசு பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதேபோல் முதல்வர் விஜய்யின் அன்புக்குரியவராக அன்பு அண்ணி த்ரிஷா மேடம் அவர்களை எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு வரும் என்று அதிர்ச்சியோடு ஆவலோடு தமிழகம் காத்திருக்கிறது. 

முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால்தான் அரசு பதவி கிடைக்கும் என்றால் அது எப்படி ஜனநாயகம் ஆகும்? சிலபேரை பலகாலம் ஏமாற்றலாம் ,பல பேரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. உணர்வுள்ள தமிழ்ச் சமூகம், விழித்தெழும் நாள் தொலைவில் இல்லை” எனக் கூறியுள்ளார்.