“விஜய்க்கு விரைவில் அரசியல் ஆச்சரியம் காத்திருக்கிறது”- ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
ஆட்சியை காப்பாற்ற குதிரை பேரம், யானை பேரம், கழுதை பேரம், ஒட்டக பேரம் நடத்தி வரும் விஜய்க்கு விரைவில் அரசியல் ஆச்சரியம் காத்திருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தமிழகம் இதுவரை காணாத அரசியல் ஆரோக்கியமற்ற நிலைப்பாட்டை தமிழகம் கண்டு வேதனைப்பட்டு கொண்டது, நம்ம முதல்வர் விஜய் அள்ளித்தரும் அதிகார அரசியல் அறிவிப்புகள் ஆட்சியிலும் பங்கு ,அதிகாரத்திலும் பங்கு இதற்கு ஆசைப்பட்டு நாள் தவறாமல் பனையூருக்கு காவடி தூக்கி செல்கின்ற நிலையை பார்க்கிற போது என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் என்ற வேதனை தான் எஞ்சி இருக்கிறது.சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பு விஜய் அவர்கள் முதல்வராக அரியணையில் அமர்வதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்காக அவர் கையாண்ட விதம் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கலகலத்துபோய்விட்டது. திமுக கூட்டணியில் தங்க வகித்த காங்கிரஸ், விசிக, வலதுகம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு முன்பு வரை 10 ஆண்டுகள் கூட்டணிதொடர்ந்து ஜெயித்த அந்த கட்சியில் எல்லாம் அதிகார அதிகாரத்திற்கு ,ஆட்சியில் பங்கு என்கிற அந்த அழைப்புக்காக த.வெ.க கட்சியோடு இன்றைக்கு பயணிக்கிற அரசியல் அரங்கேறி உள்ளது. பத்தாண்டுகள் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தேர்தலுக்குப் பிறகு த.வெ.க கட்சியோடு சேர்ந்த அரசியல் நாகரீகம் தமிழ்நாட்டுலே அரங்கி இருக்கிறது. இதை பார்க்கிறபோது நாம் என்ன சொல்ல இது குதிரை பேரமா ,அல்லது கழுதை பேரமா, ஒட்டக பேரமா, யானை பேரமா ,விசுவாச பேரமா அல்லது துரோக பேரமா என்பதெல்லாம் வார்த்தைகளாலே நாம் சொல்ல முடியாது.
முதலமைச்சர் பதவியை தவிர அமைச்சர் பதவியை தாரை பார்ப்பதாக ஆசை காட்டி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் விசுவாச தலைவர்களை விலை பேசி அவர்கள் வீடு தேடி சென்று பொன்னாடை போர்த்தி பூச்செண்டு கொடுத்து அரியணையில் அமர்ந்தவுடன் அந்த விசுவாச தலைவர்களை எல்லாம் வீதியிலே விட்டுச் சென்ற அற்பத்தனமான அரசியலையும் அரங்கேற்றியதை இந்த தாய் தமிழ்நாடு கண்டு வேதனை அடைந்தது. இப்போது படிப்படியாக அடுத்தடுத்து அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்படுகின்ற அதிகார பகிர்வு என்கிற அந்த ஆசை வார்த்தையினாலே இன்றைக்கு என்ன நடக்கிறது. தமிழ்நாட்டில் நேற்றைய தினம் மதிமுக கட்சியிலே பிளவு இரண்டு மதிமுக எம்எல்ஏக்கள் கண்ணாக கண்ணுக்கு கண்ணாக வளர்த்த அந்த இயக்கத்தின் கண்மணிகளை பறிகொடுத்து விட்டு அண்ணன் வைகோ அவர்கள் தவியாய் தவித்துக் கொண்டிருப்பது அரசியல் தடுமாற்றத்திற்கான அரங்கேற்றத்தை பார்க்கிற போது அங்கேயும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இதோடு விட்டுவில்லை பொதுவுடைமை இயக்கம் கூட்டணியில் இருந்து கொண்டுக்கும் போதே முதுபெரும் தலைவரை கட்சியில் சேர்த்து இந்த அக்கிரம அரங்கேற்றமும் நடக்கும்பொழுது வாய்மடிவாய் மூடி மௌனியாக இருக்கிறது பொதுவுடமை இயக்கம். இன்றைக்கு விஜய் கொடுத்த ஆட்சியிலும் பங்கு ,அதிகாரத்திலும் பங்கு அந்த அலாவுதீன் அற்புத விளக்கு போல அந்த வார்த்தைதான் பொதுவுடமை இயக்கத்தை ஆட்டி படைக்கிறது. தமிழக பொதுவுடைமை கட்சித்தலைவர்கள் ஒரு கருத்தை சொல்லுகிறார் முன்னாள் தலைவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்கள். தமிழ்நாட்டிலே நீண்ட கால மக்கள் பணியிலே தங்களை அர்ப்பணித்து உழைத்து வருகின்ற அரசியல் கட்சிகளின் தடுமாற்ற அரசியலை பார்த்து கண்ணீர் வடிப்பதை தவிர வேறு ஒன்றும் நமக்கு தெரியவில்லை. அநாகரிக அரங்கேற்றுகளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிற மாண்புமிகு விஜய் அவர்களே இந்த அநாகரிக அரசியலை கைவிட்டு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து தன்னுடைய த.வெ.க கட்சியை வளர்த்தெடுப்பதற்கு முன் வருவாரா இல்லை இல்லை இல்லை ஆள் பிடிக்கிற அதிகார அந்த அநாகரிக அரசியல் விஷ விதையை விதைத்து தான் த.வெ.கவை வளர்ப்பேன் ,கட்சி தாவலை தொடருவேன் என்று சொன்னால் விஜய் எப்போது திருந்துவாரோ அல்லது மக்களால் திருத்தப்படுவாரோ காலம் பதில் சொல்லட்டும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பொறுமையோடு காத்திருப்போம் அரசியல் ஆச்சரியம் மிக விரைவிலே தமிழ்நாட்டிலே நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்” எனக் கூறியுள்ளார்.