×

“கிளை செயலாளரிலிருந்து பொதுச் செயலாளர் ஆவதற்கு தகுதி படைத்தவர் ஈபிஎஸ்”

 

பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள பிரதான கோரிக்கைகளை விவாதித்து அதன் அடிப்படையில் அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த தீர்மானங்கள் செல்லாது என அறிவிப்பு செய்து இருப்பதால் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், “பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள பிரதான கோரிக்கைகளை விவாதித்து அதன் அடிப்படையில் அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கவுள்ளதாக அவைத்தலைவர் அறிவித்துள்ளார். அதற்கு பொதுக்குழு உறுப்பினர் அனைவரும் ஆதரவு தெரிவித்து வரவேற்று இருப்பதால் அடுத்த பொதுக் குழுக் கூட்டத் தொடரில் இதைப் பற்றி விவாதிக்கப்படும்.

அனைவரும் 23 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட முடிவு எடுக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி கொடுத்திருப்பதால் அவரே அதிமுகவில் ஒற்றை தலைமை எடுத்து நடத்த சிறந்த தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதாக பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாகவே இருந்து வருகிறது.கிளை செயலாளரிலிருந்து பொதுச் செயலாளர் வரை தகுதி படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. நான்காண்டுகள் செய்த சாதனை 40 ஆண்டுகள் சாதனை எனவே அடுத்த அதிமுகவின் தலைமை எடப்பாடி பழனிச்சாமி ஏற்க வேண்டும் என தொண்டர்கள் கூறியுள்ளனர்” எனக் கூறினார்.