×

“நாக்கை தொங்க போட்டு கொண்டு... அதிமுக தொண்டர்களே வாருங்கள் என்று விலை பேசி பிச்சை எடுக்கிறீர்களா?”- ஆதவ் அர்ஜூனாவுக்கு உதயகுமார் கேள்வி

 

தவெக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா அல்லது உங்கள் தலைவர் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா? முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியதாவது, “90% அதிமுக தொண்டர்களை த.வே.கவில் இணைவதாக இன்றைக்கு பல்வேறு கட்சிகளுக்கு தாவி இன்றைக்கு முதலீடு செய்த அமைச்சர் ,அதிகார மையத்தால் கருத்துக்களை தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டைக் கேட்க நாதி இல்லை என்ற நிலையில் தான் தொடர்ந்து பேசி வருகிறார். உங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா அல்லது உங்கள் தலைவர் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா ? நாக்கை தொங்க போட்டு கொண்டு எம்ஜிஆர்,ஜெயலலிதா எடப்பாடியார் வழிவந்த தொண்டர்களை கட்சியில் சேருங்கள் என்று கூவி கூவி அழைக்கிறீர்களே? இன்றைக்கு விஜய் மக்கள் செல்வாக்கு கேள்விக்குறி ஆகிவிட்டதா? அல்லது அதை நிலை நிறுத்த அதிமுக தொண்டர்களே வாருங்கள் என்று விலை பேசி பிச்சை எடுக்கிறீர்களா? விஜய் இதற்கு தடைபோடுவாரா அல்லது இந்த நாடகத்தை நடத்த அனுமதிப்பாரா என்பதுதான் அதிமுக தொண்டர்களின் கேள்வியாக உள்ளது. 

R.B.Udhayakumar on Vijay | "ரொம்ப கண்றாவியா இருக்கு விஜய், நெஞ்சு பொறுக்கல" கடுப்பான R.B.உதயகுமார்#abpnadu #rbudhayakumar #tvk #CMJosephVijay‌ #CMVijay‌ #tnpolitics #tamilnadu pic.twitter.com/egXmXtXHPh

— ABP Nadu (@abpnadu) May 29, 2026


அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் எல்லாம் தோற்றுப் போய் தான் உள்ளார்கள். இது கடந்த கால வரலாறு அதிமுகவை அழிக்க தன் முழு பலத்தையும் செலவழித்து அதிகார ஆசை காட்டி வருகிற புதிய அதிகார மையத்தில் அமைச்சர் தொடர்ந்து கூவி கூவி வருகிறார். நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. 34 சதவீதம் வாக்குகளை பெற்றது மக்களின் நம்பிக்கை பெறாத கட்சி இன்றைக்கு தொண்டர்களை விலை பேசி வருகிறது அதிகார பலத்தை வைத்து முயற்சி செய்தாலும் தொண்டர்கள் உறுதியோடுதான் இருக்கிறார்கள் இன்றைக்கு உயிரோட்டத்துடன் எடப்பாடியார் தலைமையில் நாங்கள் மக்கள் பணியாற்றுவோம்  இந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எத்தனை கட்சிக்கு சென்று உள்ளீர்கள் திமுக, விசிக ,த.வெ.க. அதற்கு முன்பு அதிமுகவில் சேர முயற்சித்தீர்கள் இன்றைக்கு கடைசி புகலிடமாக விஜயிடம் நீங்கள் அடைக்கலம் ஆகி உள்ளீர்கள் உங்களால் அதிமுகவை அழிக்க முடியாது. யானை தன் தலையில் மண்ணை போட்டுகொண்டது போல நீங்கள் உங்கள் அழிவிற்கு முயற்சிக்கிறீர்கள். ஆள் பிடிக்கு வேலையை  தொடர்ந்து நீங்கள் ஈடுபட்டால் கடும் விளைவுகளை நீங்கள் பின்தொடர நேரிடும்” என கூறியுள்ளார்.