எங்க கட்சி பேரு கூட சொல்ல மாட்டேங்கிறீங்க.. நாங்க என்ன தீண்ட தகாத கட்சியா?- விஜய் பேசியது குறித்து ஆர்.பி.உதயகுமார் வேதனை
இன்னமும் நடிகராகவே இருந்து, மக்களிடத்தில் நடித்துக் கொண்டே இருந்தால் எப்படி? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “நீங்களாம் யாரு? ஏன் இப்படி பேசுறீங்க... ஏன் இப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காதீங்க! பார்க்க முடியல. நெஞ்சு வலிக்குது! இதெல்லாம் நேரம், நீயல்லாம் பேசுறத நாங்கெல்லாம் கேட்கணும்னு தலைவிதி! இந்தியாவில் மூன்றாவது மாபெரும் கட்சி எங்கள் அதிமுக.. எங்க கட்சி பேரு கூட சொல்ல மாட்டேங்கிறீங்க.. நாங்க என்ன தீண்ட தகாத கட்சியா? விஜய்யும், அவரது கட்சிக்காரர்களும் ரொம்ப பேசுறீங்க! எந்த உழைப்பும் கொடுக்காமல், எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காமல் தேர்தல் களத்தை சந்தித்து அதிகாரத்துக்கு வந்த தம்பி விஜய், இப்போது வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்..
தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் தந்திட்ட உழைப்பு, போராட்டக் களத்தை ஒரே ஒருமுறை பட்டியல் சொல்லுங்களேன்..
கஜா புயல் வந்தது, சுனாமி வந்தது, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது நீங்கள் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தீர்களா? இன்னமும் நடிகராகவே இருந்து, மக்களிடத்தில் நடித்துக் கொண்டே இருந்தால் எப்படி?” எனக் கேள்வி எழுப்பினார்.