×

“ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! ஓபிஎஸ் பதவிக்காக எந்த நிலைக்கு போவார்”- ஆர்.பி.உதயகுமார் 

 

ஸ்டாலின் அவர்கள் முன்பு இருந்ததைக் காட்டிலும் இனி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.


மதுரை மண்டேலா நகர் பகுதியில் வரும் மார்ச் 1ல் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகை தருகிறார். அதனை ஒட்டி மாநாடு நடைபெறும் பகுதிகளில் பாஜக மற்றும் அதிமுகவினர் மேடை மற்றும் தொண்டர்கள் அமருமிடங்களுக்கான இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். பொதுக்கூட்ட மேடையருகே செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், “எம்ஜிஆர் மறைவுக்குப் பின்பு ஜெயலலிதா அவர்கள்  வழி நடத்திச் சென்றார்.தற்போது  எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி வழிநடத்துகிறார். ஒரு சிலருக்கு ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது பல்வேறு இடங்களுக்கு முகாம் மாறி செல்கின்றனர், அவரைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. தேர்தல் காலங்களில் ஒரு சிலர் இடம் இடம்மாறுவதற்காக அங்கங்கு செல்வது வருவது எல்லாம் மக்கள் பொறுப்பெடுத்த மாட்டார்கள்
உலகத் தலைவராக பாரத பிரதமர் மோடி இந்த மைதானத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். 

அதிமுகவில் ஓபிஎஸ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். அதிமுக என்று சொன்னால் அவர் எடப்பாடி மட்டும் தான் என்பது தான், அவர்கள் ஒரு விலகல் எந்த விளைவும் ஏற்படுத்தப் போவதில்லை. அவர்கள் திமுகவில் இணைந்தது அதிமுகவிற்கு பலம் திமுகவிற்கு பலவீனம். ஸ்டாலின் அவர்கள் முன்பு இருந்ததைக் காட்டிலும் இனி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஓபிஎஸ் பதவிக்காக எந்த நிலைக்கும் போவார். அதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் ஸ்டாலின் அவரைக் கட்டிப்பிடிக்கும் போதுகூட எச்சரிக்கையாக கட்டிப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் கவலைக்குரிய இடமாக போய்விடும்” என்றார்.