×

வடகிழக்கு பருவமழை 15% குறைவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், “வழக்கத்தை விட 15% வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது. தென் மாவட்ட ஆட்சியர்களுக்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளை அடையாளம் காணவும், மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள் நிறைந்து காணப்படுகிறது. நீர் தேக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உயிர் இழப்பு ஏற்பட்டால் 10 லட்சம் வழங்கப்படும். தாழ்வான
 

எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், “வழக்கத்தை விட 15% வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது. தென் மாவட்ட ஆட்சியர்களுக்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளை அடையாளம் காணவும், மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள் நிறைந்து காணப்படுகிறது. நீர் தேக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உயிர் இழப்பு ஏற்பட்டால் 10 லட்சம் வழங்கப்படும். தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.மத்திய குழு நாளை வருவதையொட்டி, ஆலோசனை நடைபெறவுள்ளது” எனக் கூறினார்.