×

ஒரே சிகரெட்டை மாறி மாறி புகைத்து கோவாவில் ரவிமோகன், கெனிஷா ஜோடி உல்லாசம்

 

நடிகர் ரவிமோகன் மற்றும் பாடகி கெனிஷா ஜோடி மீண்டும் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


நடிகர் ரவிமோகன் மற்றும் பாடகி கெனிஷா ஜோடி மீண்டும் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் கோவாவில் சுற்றுலா சென்றது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ரவி மோகனைவிட்டு விலகுவதாக பாடகி கெனிஷா அறிவித்திருந்தார். இதேபோல் ரவிமோகனும் கடைசியாக அளித்த பேட்டியில் கெனிஷாவின் முடிவு பற்றி உருக்கமாக பேசியிருந்தார்.  

இருவரும் பிரிந்துவிட்டதாக பொதுவெளியில் அறிவித்துவிட்ட நிலையில், ஒன்றாக கோவாவுக்கு சுற்றுலா சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பிரிவுக்கு முன்னரா அல்லது பின்னர் எடுக்கப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. அந்த வீடியோவில் இருவரும் ஒரே சிகரெட்டை மாறி மாறி புகைக்கும் காட்சிகள் உள்ளன.