ரவி மோகன் Vs குஷ்பூ! 3 எழுத்து நடிகை விவகாரத்தில் எக்ஸ் தளத்தில் வெடித்த மோதல்!
நடிகர் ரவி மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது, “இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை.23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன். என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. என் அப்பாவும் என் அண்ணனும் 4 வருடங்கள் வேலை செய்யவில்லை. இளம் வயதில் என் குடும்பத்திற்காக உழைத்தேன். என் குடும்பத்திற்காக நான் இருக்கிறேன். என் குழந்தைகளை பார்க்க விடவில்லை.
இன்று என் குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. பள்ளிக்கு கூட பாதுகாவலர்கள் உடன் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை வேண்டாம் என தெறித்து ஓடி வந்தேன். சம்பாதித்த பணத்தை கூட என்னால் சுதந்திரமாக செலவு செய்ய முடியவில்லை. மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுத்தார். 3 எழுத்து இட்லி நடிகை அவங்களும் என்ன அட்டாக் பண்றாங்களாம். அவங்க ஜெனெரேஷன் ஹீரோஸ் 3 பேரு என் குடும்பத்தையே கெடுக்க வந்தவனு அவங்கள சொன்னாங்க. 3 பேரு வாழ்க்கைய கெடுக்க பாத்துட்டு Feminist Feminist னு சொல்லிட்டு, என் வாழ்க்கையை கெடுக்குறாங்க. ஒரே நாளில் என்னால் விவாகரத்து செய்திருக்க முடியும். என் குழந்தைகளுக்காக அமைதி காத்தேன்” என்றார்.
இந்நிலையில் மூன்றெழுத்து நடிகை ஒருவர் தனது வாழ்க்கை குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ரவி மோகன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சிலர் தங்கள் மரபணுவை நிரூபிப்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள்; நான் சொல்வது சரிதான் என்பதை நிரூபித்ததற்கு நன்றி" என அவர் மறைமுகமாக சாடியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.