×

"மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்"- நடிகர் ரவி மோகன் உருக்கம்

 

நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன் என விருது வழங்கும் விழாவில் நடிகர் ரவி மோகன் உருக்கமாக பேசினார்.

விருது வழங்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய நடிகர் ரவி மோகன், “என் வாழ்க்கையின் பாதியை சினிமாவில்தான் கழித்திருக்கிறேன். ஆனால், என் தனிப்பட்ட முடிவு உங்கள் அனைவரையும் காயப்படுத்தியதே எனக்கு இருக்கும் ஒரே வருத்தம். அதற்காக உங்கள் அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. இனி ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டேன். 'சந்தோஷ்', 'குமரன்', 'துருவன்', 'தனி ஒருவன்', 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களைப் போலவும், உங்கள் 'கராத்தே பாபு'வாகவும் இன்னும் வலிமையாக மீண்டும் வருகிறேன். எனது சிறிய தவறு அனைவரையும் காயப்படுத்திவிட்டது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா குழப்பதால் எமோஷனலாகிவிட்டேன். சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன், ‘நீ எதை வேண்டுமானாலும் சொல்லு நாங்க ஒத்துக்குறோம், ஆனால் சினிமாவில் இருக்கமாட்டேன் என்பதை மட்டும் நீ சொல்ல கூடாது’ என்றார்கள். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டேன். திரும்பி வருவேன், திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். அந்த நம்பிக்கை கொடுத்தவர்களுக்கு நன்றி” என்றார்.