×

பகிரங்க மன்னிப்பு கேட்டார் ரவி மோகன்..!
 

 

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். அதே நேரத்தில் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்புபடுத்தி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சமூக வலை தளங்களில் இருவரை பற்றியும் தரக்குறைவான விமர்சனங்களும் வெளியாகின. இதையடுத்து, ரவி மோகனை விட்டு பிரிவதாக பாடகி கெனிஷா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதன் பின்னர் மே 16ம் தேதி நடிகர் ரவிமோகன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். 

என் குழந்தைகளை பார்க்கவிடாமல் செய்கின்றனர், எனக்கு பெரிய அநியாயம் நடந்தது என்று உணர்ச்சி பொங்க பேசினார். நீதிமன்ற உத்தரவை மீறி ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதாக ஆர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது ரவி மோகன் மன்னிப்பு கோரியிருந்தார், அதை தொடர்ந்து ஆர்த்தி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. 

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ரவி மோகன் மன்னிப்பு கேட்டு பத்திரிகையில் பொது அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.அதில், 2025ம் ஆண்டு மே மாதம் பிறப்பித்த உத்தரவை மீறி, 2026ம் ஆண்டு மே 16ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் திருமண தகராறு பற்றி கருத்து தெரிவித்ததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். தன்னுடைய கருத்துகளால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். 

பகிரங்க மன்னிப்பு கோரிய பத்திரிகை ஆவணமும் சென்னை ஐகோர்ட்டில் ரவி மோகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.