☰
×

நாளை (நவ.6) ரேஷன் கடைகள் செயல்படும் - அரசு அறிவிப்பு

 

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் நவம்பர் 6 (வெள்ளிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமைகளில் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.  இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு ஏதுவாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 8 தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.