×

நாளை ரேஷன் கடைகள் இயங்காது..! 

 

தமிழகம் முழுவதும் 26,618 முழு நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. பகுதி நேர கடைகளாக 10,710 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகளில்  மாதந்தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் வருமை கோட்டின் கீழ் இருக்கும் மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். அதே நேரத்தில், ரேஷன் கடைகளுக்கு வந்து வரிசையில் நின்று வாங்கு முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடியும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, தாயுமானவர் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்களின் வீடுகளுக்கு சென்றே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. 

இப்படியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து,  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நாளை மஹாவீர் ஜெயந்தி முன்னிட்டு ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த மாத ரேஷன் பொருட்களை வாங்காதவர் உடனடியாக இன்று பொய் வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.