☰
×

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு! இன்று இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! 

 

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்று  (26.09.2026) கை ரேகைப் பதிவு (eKYC) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் நாளை (26.09.2026) கை ரேகைப் பதிவு (eKYC) சிறப்பு முகாம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன் படி குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.57% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு நாளை (26.09.2026) அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளைத் தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, இதுவரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகைப் பதிவு (eKYC) மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளைய தினம் (26.09.2026) நடைபெறவுள்ள இச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.