ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! இலவச அரிசி தொடர்ந்து பெற உடனே இதை செய்யுங்க..!
ரேஷன் கார்டுதாரர்கள், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் இ–கே.ஒய்.சி., விரல் ரேகையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டுடன் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஜூலை 31க்குள் கைரேகை பதிவு செய்து ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பதிய வேண்டும்.
இறந்த உறுப்பினர்களின் பெயர்களை ஜூலை 25க்குள் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் தங்களது பகுதியில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினரின் குடும்ப அட்டை எண்ணுடன் ஆதார் கார்டின் நகலை வழங்க வேண்டும். கைரேகை இல்லாத குழந்தைகள், முதியோர்கள் முதலில் தங்கள் ஆதார் கார்டில் கைரேகை, கண் பதிவை புதுப்பித்த பின்பே இ–கே.ஒய்.சி., செய்ய வேண்டும்.
மூத்த குடிமக்கள்: மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலக் குறைவு அல்லது இயலாமை காரணமாக நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், சம்பந்தப்பட்ட விற்பனையாளரைத் தொடர்புகொள்ளலாம்.
இல்லம் தேடி வரும் வசதி: ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத பயனாளிகளுக்கு, விற்பனையாளர்கள் அவர்களது இல்லங்களுக்கே நேரில் வந்து பயோமெட்ரிக் சரிபார்ப்புப் பணியை நிறைவு செய்து தருவார்கள்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இலவச அரிசி மற்றும் மானிய விலை பொருட்களை தொடர்ந்து பெற, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஜூலை 31-க்குள் ரேஷன் கடைகளில் e-KYC விரல்ரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலி கார்டுகளை தவிர்க்கவும் தகுதியற்றவர்களை நீக்கவும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் உடனடியாக விரல்ரேகை பதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர் நீக்கம் போன்ற பணிகளை முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
AAY மற்றும் PHH பிரிவுகளை சேர்ந்த ரேஷன் அட்டை பயனாளிகள், எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தோடர்ந்து பலன்களை பெற ஜூலை 31 ஆம் தேதிக்குள் இந்த பணியை செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.