ரேஷன் அட்டைதாரர்கள் ஷாக்..!! 2027 பொங்கல் பரிசில் 4 முழ வேட்டி மட்டுமே வழங்கப்படும்..!!
Aug 2, 2026, 13:18 IST
2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச வேட்டியின் அளவில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கைத்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது வழங்கப்பட்டு வரும் 8 முழ வேட்டிக்கு பதிலாக 4 முழ வேட்டி வழங்கப்படும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள கைத்தறி & பெடல் தறிகளில் இதற்கான புதிய மாற்றத்தை செய்ய ₹11,000 -₹14,000 வரை செலவாகுமாம். இது நடுத்தர நெசவாளர்களை பாதித்துள்ளதாக கூறுகின்றனர்