இன்று ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்! பெயர் மாற்றம், விரல்ரேகை பதிவு செய்ய அரிய வாய்ப்பு!
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் இன்று 08.08.2026 பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்க உள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை 08.08.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான ஆகஸ்ட்- 2026 மாதத்திற்கான குறைதீர் முகாம் 08.08.2026 சனிக்கிழமை அன்று வட்ட அளவில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர்அவர்களின் கடிதத்தில், பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டங்களிலும், பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்ற அறிவுரைகளின்படி, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான ஆகஸ்ட்- 2026 மாதத்திற்கான குறைதீர் முகாம் 08.08.2026 சனிக்கிழமை அன்று வட்ட அளவில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
மேற்படி வட்ட அளவில் நடைபெறும் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், அக்குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல்ரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.தெரிவிக்கப்படுகிறது.
இங்கே, சென்னை, திருவள்ளூர் மாவட்ட ரேஷன் கார்டு குறைத்தீர்ப்பு முகாம் விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தாலும், மற்ற மாவட்டத்தினர் இந்த தேதியில் உங்கள் பகுதியில் இருக்கும் தாலுகா அலுவலகங்களில் நடக்கும் ரேஷன் கார்டு குறைத்தீர்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு இந்த சேவையை பெற்றுக் கொள்ளவும்.