×

 வி. ரத்தினசபாபதி மறைவு - கே.எஸ்.அழகிரி இரங்கல் 
 

 

இந்திய அரசின் வருமான வரித்துறையில் நீண்டகாலம் பணியாற்றி அதன் தொழிற்சங்கத் தலைவராக மிகச் சிறப்பாக செயல்பட்ட திரு. வி. ரத்தினசபாபதி அவர்கள் பெங்களுரில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய அரசின் வருமான வரித்துறையில் நீண்டகாலம் பணியாற்றி அதன் தொழிற்சங்கத் தலைவராக மிகச் சிறப்பாக செயல்பட்ட திரு. வி. ரத்தினசபாபதி அவர்கள் பெங்களுரில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் மீதும், மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்கள் தலைமையின் மீதும் அளவற்ற பற்று கொண்டு செயல்பட்ட மிகச் சிறந்த தேசியவாதி அருமை நண்பர் ரத்தினசபாபதி. காங்கிரஸ் கொள்கையின் மீது பற்று கொண்டு வகுப்புவாத சக்திகளின் எதிர்பாளராக வாதம் செய்வதில் தனித்துவமிக்கவராக இருந்தார் என்பதை எவரும் மறந்திட இயலாது.