அங்கன்வாடியில் சாதி ரீதியாக குழந்தைகள் பிரித்து வைப்பதாக புகார்
ராசிபுரம் அருகே ஒரே இடத்தில் தனித்தனியாக செயல்படும் 2 அங்கன்வாடி மையங்களில் சமுதாய ரீதியாக குழந்தைகள் பிரித்து வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அதில், பல ஆண்டுகளாக ஏதுமறியாத குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கப்பட்டு இருப்பதாகவும், இது அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம் எனவும் விமர்சித்திருந்தார். மேலும் 21-ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடான ஒன்று என தெரிவித்துள்ள அண்ணாமலை, இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி என கூறி உள்ளார். உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து காக்காவேரி புது காலனியை சேர்ந்த பூபதி கூறுகையில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்து குழந்தைகள் மத்தியில் சாதிய பாகுபாடை வளர்ப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார் ஆனால் அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று விசாரித்த போது, சாதிய பாகுபாடு ஏதும் கடைபிடிக்கப்படுவதாக தெரியவில்லை என குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அங்கன்வாடி மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.