×

ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின்

 

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஜீயர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சமூக வலைதளங்களில் ஜீயர்கள் குறித்து அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார், புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஜீயர்கள் குறித்து அவதூறாகவும், துணை முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவரை சென்னை மத்திய  குற்றப்பிரிவு போலீசார்,கடந்த வாரம் அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவதூறாக பேசிய வீடியோ நீதிமன்றத்தில் காவல்துறையால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதனைப் பார்வையிட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், மடாதிபதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக் கூடாது என ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்கினார். சாட்சிகளை மிரட்டவோ, தொடர்புகொள்ளவோ கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.