×

ராமேஸ்வரம்- திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து மீனவர் அமைப்பினர் போராட்டம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறைக்கு ரோந்து படகு வாங்குவதற்காக, கடலுக்கு சென்று வரும் மீனவர்களிடம் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில், மீனவர் அமைப்பினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விசைப் படகுகளும், நாட்டு படகுகளும் அரசின் உத்தரவை மீறி இரட்டைமடி வலை மீன்பிடிப்பில் ஈடுபடுவதுடன், சுருக்குவலைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பதுடன், கரையோரங்களில் விசைப்படைகளைக் கொண்டு மீன் பிடிப்பதால் கடல்வளம் முற்றிலும் அழிந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழிலை
 

ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறைக்கு ரோந்து படகு வாங்குவதற்காக, கடலுக்கு சென்று வரும் மீனவர்களிடம் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில், மீனவர் அமைப்பினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விசைப் படகுகளும், நாட்டு படகுகளும்

அரசின் உத்தரவை மீறி இரட்டைமடி வலை மீன்பிடிப்பில் ஈடுபடுவதுடன், சுருக்குவலைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பதுடன், கரையோரங்களில் விசைப்படைகளைக் கொண்டு மீன் பிடிப்பதால் கடல்வளம் முற்றிலும் அழிந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழிலை மட்டும் நம்பியுள்ள சிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை தடுக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மீன்வளத்துறையினர், தங்களிடம் ரோந்து படகு இல்லை என்ற காரணத்தை கூறி தவறுசெய்யும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில், சி.ஐ.டி.யு அமைப்பின் கடல் தொழில் சங்கம் சார்பில் மீன்வளத்துறைக்கு படகு வாங்க, கடலுக்கு சென்று வரும் மீனவர்களிடம் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரமேஸ்வரம் சங்குமால் கடற்கரை பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்களிலும் மீனவர்களிடம் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து, அந்த பணத்தை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கொடுத்து ரோந்து படகு வாங்க கோரிக்கை வைக்கப்படும் என மீனவர் அமைப்பினர் தெரிவித்தனர்.