×

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

 

ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா கூறியதாவது: ராமேஸ்வரத்தில் இருந்து தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 29 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும். ஏற்கனவே பறிமுதல் செய்த 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(ஆக.,30) முதல் வேலை நிறுத்தம் செய்யவுள்ளோம். தொடர்ந்து செப்.,1 முதல் தொடர் உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மீன்வளத்துறை அமைச்சர் ஆக.,30ல் மீனவர் குழுவை சந்திக்க அனுமதி அளித்துள்ளார். அதில் சுமுக முடிவு எட்டப்பட்டால் வேலை நிறுத்தம் கைவிடப்படும், என்றார்.