"நான் நலமுடன் இருக்கிறேன்"- வைரல் வீடியோவுக்கு ரமேஷ் கண்ணா விளக்கம்!
Nov 27, 2026, 15:50 IST
நடிகர் ரமேஷ் கண்ணா, காரில் இருந்து இறங்கி செல்லும் போது உதவியாளர் கைகளை பிடித்து தள்ளாடியபடி நடந்து சென்ற வீடியோ வைரலான நிலையில், "நான் நலமுடன் இருக்கிறேன்" என நடிகர் ரமேஷ் கண்ணா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரமேஷ் கண்ணா தள்ளாடியபடி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தனது உடல்நலம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அந்தப் பகுதியில் மழை பெய்து சேறும் சகதியுமாகவும், மண் கொட்டப்பட்டும் இருந்ததால் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மெதுவாக நடந்தேன். நான் நலமாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.