×

சிரஞ்சீவியின் ஆசைப்பட்டபடி ஆண் வாரிசு! ராம்சரணுக்கு ட்வின்ஸ்

 

முன்னர் வீடு லேடீஸ் ஹாஸ்டல் போல இருக்கு என மெகா ஸ்டார் சிரஞ்சீவி கூறியது சர்ச்சையான நிலையில், தற்போது அவர், ஆசைப்பட்டப்படி அவரது மகன் ராம்சரணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதோடு, இன்னொரு பெண் குழந்தையும் பிறந்து ராம்சரண்- உபாசனா தம்பதியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

null

null

null


இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில், “மிகுந்த மகிழ்ச்சியுடனும், நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடனும், அதைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன, ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை. குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர். இந்த குழந்தைகளை எங்கள் குடும்பத்தில் வரவேற்பது, தாத்தா பாட்டிகளாகிய எங்களுக்கு தூய மகிழ்ச்சி மற்றும் தெய்வீக ஆசீர்வாதத்தின் தருணம். அனைவரின் பிரார்த்தனைகள், அன்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றி கூறுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.