×

இலங்கைக்கு கடத்தமுயன்ற ரூ.16 லட்சம் மதிப்பிலான மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் பாம்பனில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை நாட்டுப்படகில் கடத்தப்படுவதாக, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த நாட்டுப்படகை சோதனை செய்தனர். அப்போது, படகில் சுமார் 16 லட்சம்
 

ராமநாதபுரம்

பாம்பனில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை

நாட்டுப்படகில் கடத்தப்படுவதாக, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த நாட்டுப்படகை சோதனை செய்தனர். அப்போது, படகில் சுமார் 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சள் இருந்தது

தெரியவந்தது. இதனையடுத்து மஞ்சளையும், கடத்துவதற்கு பயன்படுத்திய நாட்டுப்படகையும் பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கடத்தல்காரர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களில் போதைப்பொருட்களும், தங்க கட்டிகளையும் கடத்திவந்த நிலையில், தற்போது இலங்கைக்கு மஞ்சள் கடத்திவருவது வாடிக்கையாகி வருகின்றது. இச்சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.