×

ராமநாதபுரம்: அருண்பிரகாஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய எச்.ராஜா

ராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல் காரணமாக கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் அருண் பிரகாஷ் வீட்டுக்கு பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரத்தில் இரு கோஷ்டிக்கு ஏற்பட்ட மோதலில் அருண்பிரகாஷ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா குழுவில் இவர் இருந்துள்ளார். எனவே, இந்த ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி விழா மோதல் காரணமாக அவர் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இதற்கு ராமநாதபுரம் போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
 


ராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல் காரணமாக கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் அருண் பிரகாஷ் வீட்டுக்கு பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இரு கோஷ்டிக்கு ஏற்பட்ட மோதலில் அருண்பிரகாஷ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா குழுவில் இவர் இருந்துள்ளார். எனவே, இந்த ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி

விழா மோதல் காரணமாக அவர் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இதற்கு ராமநாதபுரம் போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இது இரு குழுவினர் இடையே ஏற்பட்ட மோதல், கொலை செய்ததாக பல மதத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்தனர். மேலும்

போதைப் பொருள் கடத்தல் விற்பனை உள்ளிட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த பிரச்னையை தமிழக பா.ஜ.க கையில் எடுத்துள்ளது. போலீசின் விளக்கத்தை அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஏற்க மறுத்து தமிழக

அரசு மற்றும் போலீசுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று கூறி வரும் அவர், கொலை செய்யப்பட்ட இளைஞர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். இது அந்த பகுதியில் இரு மதத்தவர்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.